தனுஷ் நடித்துள்ள ‘விஐபி 2′ திரைப்படம் அஜித்தின் ‘தல 56′ மற்றும் கமலின் தூங்காவனம் படங்களுடன் தீபாவளியில் திரைக்கு வரும் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் மற்ற இரு படங்களும் தங்களது ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் தனுஷ் தரப்பிலிருந்து ‘விஐபி 2′ குறித்து எந்தவொரு தகவலும் வெளிவரவில்லை. இதற்கான காரணம் என்னவென்பது தற்போது தெரியவந்துள்ளது.
நடிகர் தனுஷ் தற்போது விஜய் சேதுபதியின் நானும் ரௌடிதான் படத்தை தயாரித்து வருகிறார். இதன் வெளியீட்டுக்கு பிறகே ‘விஐபி 2′ படத்தை வெளியிட அவர் திட்டமிட்டுள்ளார். எனவேதான் ‘விஐபி 2′ ரிலீஸ் குறித்து அவர் மௌனம் காத்து வருவதாக சொல்லப்படுகிறது.
தனுஷின் நண்பர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள நானும் ரௌடிதான் படம் வரும் அக்டோபர் 21-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உறுதியாகும் பச்சத்தில் தனுஷின் ‘விஐபி 2′ தீபாவளியன்று திரைக்கு வருவது உறுதி.
0 comments:
Post a Comment