நடிகர் தனுஷை டிவிட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்போது இரண்டு மில்லியனை கடந்துள்ளது. தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறகு இந்த சாதனையை புரியும் இரண்டாவது நடிகர் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் மிகுந்த உற்சாகமடைந்துள்ள தனுஷ், டிவிட்டரில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ் தற்போது பிரபுசாலமன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. கீர்த்தி சுரேஷ் இதில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
0 comments:
Post a Comment