நடிகர் தனுஷ் ‘மாப்பிள்ளை’, ‘படிக்காதவன்’, ‘பொல்லாதவன்’ என ரஜினி பட தலைப்புகளை சூட்டி உள்ளார். தற்போது ரஜினியுடன் இணைந்து நடிக்க தயாராகி வருகிறார்.
இந்தி, தெலுங்கு பட உலகில் இரண்டு கதாநாயகர்கள் இணைந்து நடிப்பது சகஜமாக இருக்கிறது. மலையாள படங்களில் அது போல் நடிக்கின்றனர். ஆனால் தமிழில் மட்டும் ஒரு கதாநாயகன் மட்டும் நடிப்பது வழக்கமாக இருக்கிறது. சமீபத்தில் அந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.

அந்த வகையில் ரஜினி நடிக்கும் எந்திரம் 2 ம் பாகத்தில் இன்னொரு முன்னணி கதாநாயகன் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. நடிகர் தனுசும் ரஜினியுடன் புது படத்தில் அதிவிரைவில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து நடிகர் தனுஷ் கூறியது யாதெனில் ரஜினியுடன் சேர்ந்து நடிக்க விரும்புகிறேன். ரஞ்சித் இயக்கும் படத்தில் ரஜினி தற்போது நடிக்கிறார். அந்த படத்தில் நடிக்க என்னையும் ரஞ்சித் பரிசீலிப்பார் என நம்புகிறேன் என ஒரு விண்ணப்பம் வைத்துள்ளார்.
0 comments:
Post a Comment