தனுஷ் ஒரு பக்கம் நடிகராக பிஸியாக இருந்தாலும் மற்றொரு பக்கம் தயாரிப்பாளராக படுபிஸியாக இருக்கிறார். இவர் சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து ‘காக்கா முட்டை’ என்ற படத்தை தயாரித்திருந்தார். தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்று மக்களின் அமோக ஆதரவை பெற்றது.
இதனைத் தொடர்ந்து மீண்டும் தனுஷ், வெற்றிமாறன் இணைந்து ‘விசாரணை’ படத்தை தயாரித்திருக்கிறார்கள்.’லாக் அப்’ என்ற நாவல் கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இதில் ‘அட்டக்கத்தி’ தினேஷ், ‘கயல்’ ஆனந்தி, ‘ஆடுகளம்’ முருகதாஸ், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க வெற்றிமாறன் இயக்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘நானும் ரவுடிதான்’. படத்தை தனுஷ் தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தனுஷ் தயாரித்துள்ள இந்த இரு படங்களின் உரிமையை லைக்கா நிறுவனம் பெற்றுள்ளது. ‘விசாரணை’ படத்தின் உலகளாவிய உரிமையையும் ‘நானும் ரவுடிதான்’ படத்தின் தமிழக உரிமையையும் லைக்கா வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment