சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களின் படங்களில் இடம் பெறும் பாடல்களின் முதல் எழுத்துக்களைக் கொண்டு படங்கள் உருவாகி வருகிறது. அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தில் இடம் பெற்ற ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ என்ற பாடல் பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது.
அதுபோது தனுஷ் நடிப்பில் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் இடம்பெற்ற ‘டீ கடை ராஜா’ என்ற பாடல் வரியை தலைப்பாக கொண்டு ஒரு புது ஒன்று தயாராகி வருகிறது. இந்த படத்தை ராஜா சுப்பையா இயக்கி நடிக்கிறார், “உ” படத்தில் நடித்த நேஹா இதில் கதாநாயகியாக நடிக்கிறார். யோகி பாபு காமெடி நடிகராக நடிக்கிறார்.
மதன் பாப் மற்றும் பாடகி அனுராதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். இது ஒரு காமெடி கலந்த காதல் கதையாக உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தை பன்டூன் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வெண்ணிலா வீடு படத்தின் இசை அமைப்பாளர் தன்ராஜ் மாணிக்கம் இசையமைத்துள்ளார்.
0 comments:
Post a Comment