மாரி படத்தையடுத்து தொடர்ச்சியாக விஐபி2, வட சென்னை, துரை செந்தில் குமாரின் புதிய படமென இந்த வருடம் முதல் அடுத்த வருடம் அரையாண்டு வரை தனுஷ் தனது அட்டவணையை நிரப்பி வைத்துள்ளார். இந்நிலையில் இவரது அடுத்த படம் விரைவில் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளன.
துரை செந்தில்குமார் இயக்க உள்ள இப்படம் அரசியல் த்ரில்லர் படமாம். இரு வேடங்களில் இந்த படத்தில் தனுஷ் நடிக்க இருப்பது நாம் அறிந்ததே. இந்நிலையில் கதை குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் அண்ணன் , தம்பியாக இரு வேடங்களில் நடிக்கிறார் தனுஷ். அண்ணன் தனுஷ் அரசியல்வாதியாகவும், தம்பி தனுஷ் லோக்கல் பையனாகவும் நடிக்கிறாராம்.
அண்ணன் தனுஷுக்குத்தான் வித்யா பாலனை ஜோடியாக்க படக்குழு முயன்றனர். ஆனால் அவர் மறுக்கவே இப்போது அந்த கேரக்டரில் லட்சுமி மேனன் நடிக்க இருக்கிறார். தம்பிக்கு ஜோடியாக ஷாலினியின் தங்கையும், அஜித்தின் மச்சினியுமான அஞ்சலி படப்புகழ் ஷாமிலியை தேர்வு செய்துள்ளனர்.
இந்த கேரக்டருக்குத்தான் ஷாமிலியை தனுஷ் பரிந்துரை செய்துள்ளார். படத்தின் ஒரு தனுஷ் வில்லனாக இருப்பார் எனவும் சொல்லப்படுகிறது. எனினும் தனுஷின் நடிப்பிற்கு தீணி போடும் படமாக இந்தப் படம் இருக்கும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment