பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் அவரது ஜோடியாக முதல்முறையாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னை பின்னிமில்லில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் தனுஷுடன் நடிக்கும் அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய கீர்த்தி சுரேஷ், ” மிகவும் அனுபவம் வாய்ந்த அவரிடம் நான் பல விஷயங்களை கற்று வருகிறேன். படப்பிடிப்பு தளத்தில் அவர் அதிகம் பேசமாட்டார். அமைதியாக வந்து அமைதியாக போவார்” என கூறினார்.
சிவகார்த்திகேயன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் ரஜினி முருகன் திரைப்படம் வரும் செப்டம்பர் 17-ம் தேதியன்று திரைக்கு வருகிறது. அதன்பின் இவர் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார்.

0 comments:

Post a Comment

 
Top