யூ டு தனுஷ் என்று பதறிக் கொண்டே செய்தியை படிக்கும் அன்பர்களிடம் முதலில் ஸாரி சொல்லிக் கொள்கிறோம். தனுஷ் அரசியலில் குதிப்பது நிஜத்தில் அல்ல, படத்தில்.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் அண்ணன், தம்பி என இரு வேடங்களில் நடிக்கிறார் தனுஷ். இதில் அண்ணன் அரசியல்வாதி. அரசியல் பின்னணியுடன் படம் தயாராகிறது. பொலிடிகல் த்ரில்லர் என்கிறார்கள்.
புதுப்பேட்டையில் அரசியல் இருந்தாலும், தாதா வாழ்க்கைதான் அதில் பிரதானம். இந்தப் படத்தில் அரசியல் பிரதானமாக வருகிறதாம். அண்ணன் தனுஷுக்கு லட்சுமி மேனனையும், தம்பிக்கு ஷாம்லியையும் ஜோ‌டியாக்கியிருக்கிறார்கள்.
அக்டோபரில் படத்தை தொடங்கி டிசம்பருக்குள் முடிப்பதாக திட்டம்.

0 comments:

Post a Comment

 
Top