வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணி மீண்டும் இணையவிருக்கும் வட சென்னை படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்குகிறது. வழக்கமாக தனுஷ் ஒரு படத்துக்கு 100 நாட்களுக்கும் குறைவாக தான் கால்ஷீட் வழங்குவார். ஆனால் வெற்றிமாறன் மீதுள்ள நம்பிக்கையால் இப்படத்துக்கு அவர் தொடர்ச்சியாக 250 நாட்கள் கால்ஷீட் வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ் தயாரித்து நடிக்கவிருக்கும் இப்படம் பாகுபலி பாணியில் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இதில் முதல் பாகம் அடுத்த ஆண்டும் இரண்டாம் பாகம் அதற்கடுத்த ஆண்டும் திரைக்கு வருகிறது. சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

0 comments:

Post a Comment

 
Top