சேலத்தில் வசிக்கும் ஏழை வியாபாரியான அத்துல்குமாரின் குழந்தை நிரானி. சில நாட்களாக இந்த குழந்தை உடல்நிலை சரியில்லாமல் உயிருக்கு போராடி வந்துள்ளது. எனவே நிதி திரட்டுவதற்காக இவரது தந்தை இந்த தகவலை பிரபல நாளிதழ் ஒன்றில் வெளியிட்டார்.
இதைக்கண்ட நடிகர் தனுஷ், தனது உதவியாளர் வினோத் என்பவரின் மூலம் அந்த குழந்தைக்கு 5 லட்சம் ரூபாய்க்கான வங்கி காசோலையை கொடுத்து அனுப்பினார். இதுகுறித்து நிரானியின் தந்தை கூறுகையில், ” நாளிதழில் செய்தி வெளியானதும் தனுஷ் உட்பட பல்வேறு பள்ளி, கல்லூரிகள் உதவி செய்ய முன்வந்தன. தனுஷ் ஐந்து லட்சம் கொடுத்ததோடு இதை விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். தற்போது எனது குழந்தை ஆரோக்கியமாக இருக்கிற்து என்றால், நடிகர் தனுஷுக்கும் இதில் பங்கு உண்டு” என்றார்.
0 comments:
Post a Comment