மாரியை தொடர்ந்து வேல்ராஜின் விஐபி-2 படத்தில் நடித்து முடித்த தனுஷ், பிரபுசாலமன் இயக்கம் படத்தில் முழுக்கவனம் செலுத்தி வருகிறார். டெல்லியில் இருந்து சென்னையை நோக்கி வரும் ஒரு ரயிலுக்குள் நடக்கும் காதல் கதை தான் இந்த படம் இதில் ஒரு நடிகையின் டச்சப் பெண்ணாக கீர்த்தி சுரேசும், தம்பி ராமையா நடத்தும் கேட்டரிங்கில் வேலை செய்யும் டீ பாயாக தனுசும் நடித்து வருகிறார்.


ஆனால் கீர்த்தி சுரேசை டச்சப் பெண் தெரியாமல் நடிகை என நினைத்து அவர் மீது காதல் கொள்வாராம் தனுஷ். அதேப்போல் கீர்த்தி சுரேஷ்க்கும் அவர் மீது காதல் பிறக்குமாம். அப்போதுதான், தான் நடிகை என்று நினைத்த அந்த பெண் ஒரு நடிகையின் டச்சப் பெண் என்பது தனுசுக்கு தெரிய வருமாம் இதையடுத்து அவர்கள் இணைகிறார்களா? என்பது தான் படத்தின் கதையாம்.




மேலும், முதல் பாதியை காதல், காமெடி என கலகலப்பாக இயக்கியுள்ளர் பிரபுசாலமன். இரண்டாம் பாதியாக ஆக்சன் கதையில் இயக்குகிறார். காதல் உருவாகும் காட்சிகளை இதுவரை சென்னையில் செட் அமைத்து படமாக்கி வந்தார், வடஇந்தியா சென்று படமக்கப்போகிறாராம். ஆக படத்தின் பிற்பாதி முழுக்க ரயிலுக்கு வெளியே நடக்கும் காட்சிதான் இடம்பெறுகிறதாம். விரைவில் சென்னையில் படபிடிப்பை முடித்து விட்டு வடஇந்தியா பரகிறாரதாம் தனுஷ்-பிரபுசாலமன் டீம்.

0 comments:

Post a Comment

 
Top