‘ஜப் தக் ஹை ஜான்’ தோல்விக்கு பிறகு நடிகர் ஷாருக்கானுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்த படம் சென்னை எக்ஸ்பிரஸ். இதில் கதைப்படி ஒரு சூழ்நிலை காரணமாக இவரும் நடிகை தீபிகா படுகோனும் ஒரே ரயிலில் மாட்டிகொள்வார்கள்.
பின்பு அவர்களுக்குள் ஏற்படும் காதலும் அதைதொடர்ந்து வரும் ஆக்ஷன் காட்சிகளும் என படம் செம விறுவிறுப்பாக செல்லும். இந்நிலையில் தற்போது பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படத்தின் கதையும் இதே பாணியில் உருவாகியிருப்பதாக சொல்லப்படுகிறது.
எனவே இந்த படமும் ஹிந்தி ரசிகர்களை பெரிதளவில் கவரும் என கணக்குப்போட்ட தனுஷ், இதன் ஹிந்தி வெளியீட்டு உரிமையை தற்போது தன்வசப்படுத்தியுள்ளார். இப்படம் தமிழில் வெளியாகும் அதேநேரத்தில் ஹிந்தியிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment