துரை செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தில் நடிகர் தனுஷ் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். இதில் தம்பி தனுஷுக்கு ஜோடியாக ஷாலினியின் தங்கை ஷாம்லி ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அண்ணன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க லக்ஷ்மி மேனனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கொஞ்சம் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரம் என்பதால் இதில் நடிக்க நடிகை லக்ஷ்மி மேனன் தயக்கம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. எனினும் விரைவில் அவர் சம்மதம் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் கூட்டாக தயாரிக்கவுள்ளது. வேல்ராஜ் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.
0 comments:
Post a Comment