பிரபுசாலமன் இயக்கிவரும் பெயரிடப்படாத புதிய படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ், காக்கிசட்டை புகழ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்குகிறது.
இந்நிலையில் இப்படத்தில் தனுஷ் முதல்முறையாக இரட்டை வேடத்தில் அதுவும் இரட்டையர்களாக நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணன் – தம்பி சென்டிமென்டை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் நடிகர் தனுஷ் அண்ணனாகவும் தம்பியாகவும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன் நடித்திருக்கும் ‘விஐபி 2′ திரைப்படம் வரும் அக்டோபர் இறுதியில் வெளியாக தயாராகி வருகிறது.
0 comments:
Post a Comment