முன்பெல்லாம் ஒரு நடிகருக்கு எவ்வளவு ரசிகர் மன்றங்கள் இருக்கிறது? அவர்கள் நடித்த படங்கள் எவ்வளவு நாட்கள் ஓடியது? வசூல் விவரம் எப்படி? ஆகியவை கணக்கில் கொள்ளப்படும். ஆனால் தற்போது தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதால் பேஸ்புக், ட்விட்டர் வலைத்தளங்களில் நடிகர்களை பாலோ செய்யும் ரசிகர்களின் எண்ணிக்கை எவ்வளவு? வெளியான டீஸர், ட்ரைலர்களின் பார்வையாளர்கள் எண்ணிக்கை ஆகியவையும் கணக்கில் கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் ‘கோச்சடையான்’ படம் வெளியாகும் சமயத்தில் ரசிகர்களுக்காக ட்விட்டரில் கணக்கை தொடங்கினார் ரஜினிகாந்த். அவரை ட்விட்டரின் தலைமை அதிகாரியே வரவேற்றது நாம் அறிந்ததே. தற்போது இவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையில் இவர்தான் முதலிடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து சூர்யா மற்றும் விஜய் இருந்தனர்.
இதனிடையே தனுஷ் நீண்ட நாட்களாக ட்விட்டரில் வலம் வருகிறார். மேலும் இவரது படம் தொடர்பாகவும் இதர நிகழ்ச்சிகள் தொடர்பாக ரசிகர்களுடன் அடிக்கடி உரையாடி வருகிறார். தன் படத்தகவல்களை உடனே ட்விட்டரில் தெரிவித்துவருகிறார்.
தற்போது தனுஷை சுமார் 2 மில்லியன் பேர் பாலோ செய்கின்றனர். நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோர்கள் ட்விட்டரை அடிக்கடி பயன்படுத்தாத காரணத்தால் தனுஷ் ரஜினியின் அடுத்த இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment