காக்கிசட்டை புகழ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் புதிய படத்துக்கு அனிருத் இசையமைக்கப்போவது நாம் அனைவரும் அறிந்ததுதான். இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இப்படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்வார் என சொல்லப்படுகிறது.
இது உண்மையாகும் பச்சத்தில் பரட்டை என்கிற அழகுசுந்தரம், பொல்லாதவன், ஆடுகளம், 3, நய்யாண்டி, விஐபி, விஐபி 2 ஆகிய படங்களைத் தொடர்ந்து தனுஷுடன் எட்டாவது முறையாக இணைகிறார் வேல்ராஜ். இதன் படப்பிடிப்பு வரும் அக்டோபர் இறுதியில் தொடங்குகிறது. ஷாலினியின் தங்கை ஷாமிலி இதில் ஒரு தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
தற்சமயம் தனுஷ், பிரபுசாலமன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் கீர்த்தி சுரேஷ் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
0 comments:
Post a Comment