தனுஷ் நடிப்பில் பொல்லாதவன்,
ஆடுகளம் ஆகிய படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். இந்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றதோடு, ஆடுகளம் படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. ஆனால் அதையடுத்து சிம்புவை நாயகனாக வைத்து வடசென்னை என்ற படத்தை இயக்குவதாக இருந்தார். ஆனால் படப்பிடிப்பு தொடங்கப்படயிருந்த கடைசி நேரத்தில் அப்படம் கிடப்பில் போடப்பட்டது. அதையடுத்து எந்த படத்தையும இயக்காத வெற்றிமாறன், தனது பட நிறுவனம் மூலமாக சில படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில், மீண்டும் தனது ஆஸ்தான நாயகனான தனுஷை வைத்து தற்போது ஒரு படத்தை வெற்றிமாறன் தொடங்கியுள்ளதாகவும், அதன் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் நேற்று மாலை பொறியாளன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்திருந்த அவரிடம் அதுபற்றி கேட்டபோது, தற்போது நான் இயக்கிக் கொண்டிருக்கும் படத்தில் தனுஷ்-பார்த்திபன் இருவரும் நடித்து வருகிறார்கள். அந்த கதைக்கேற்ற தலைப்பாக சூதாடி என்று வைக்க முடிவு செய்திருக்கிறேன். ஆனால் அந்த தலைப்பை இன்னும் சேம்பரில் பதிவு செய்யவில்லை. ஒருவேளை நான் பதிவு செய்யச் செல்லும்போது அந்த தலைப்பை வேறு யாராவது பதிவு செய்திருந்தால் வேறு நல்ல தலைப்பாக வைப்பேன் என்றார்.

0 comments:

Post a Comment

 
Top