கமலின் தூங்காவனம், அஜித்தின் ‘தல 56′ மற்றும் தனுஷின் ‘விஐபி 2′ ஆகிய படங்கள் தீபாவளி ஸ்பெஷலாக ஒரேநாளில் திரைக்குவரும் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் தற்போது தனுஷின் ‘விஐபி 2′ படம் மட்டுமே தீபாவளியன்று திரைக்குவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற இரு படங்களும் ஒரு வாரத்திற்கு முன்பாகவே அதாவது அஜித்தின் ‘தல 56′ நவம்பர் 5-யிலும் கமலின் தூங்காவனம் நவம்பர் 6-யிலும் வெளியாகும் என சொல்லப்படுகிறது. ‘விஐபி 2′ படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் செப்டம்பர் 17-ம் தேதியன்று வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. தனுஷ் ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ள இப்படத்தை வேல்ராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
0 comments:
Post a Comment