வெற்றிமாறன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக தனுஷ் நடிக்கவிருக்கும் படம் வட சென்னை. இதன் படப்பிடிப்பு முன்னதாக அக்டோபரில் தொடங்குவதாக இருந்தது. ஆனால் தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி இப்படம் ஜனவரியில் தான் தொடங்கும் என சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் தனுஷ், ‘காக்கிசட்டை’ புகழ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இது
குறுகியகால படமாக உருவாகவுள்ளது. தனுஷ் முதல்முறையாக இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார். வெற்றிமாறனின் க்ராஸ் ரூட் நிறுவனமும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை கூட்டாக தயாரிக்கவுள்ளது.

0 comments:

Post a Comment

 
Top