விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்துள்ள 24 படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ரசிகர்கள் மட்டுமல்லாது திரை பிரபலங்களும் இந்த டீசரை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
இந்த டீசர் குறித்து நடிகர் தனுஷ் டிவிட்டரில் கூறியிருப்பதாவது, ” 24 படத்தின் டீசர் உலகத்தரம் வாய்ந்து காணப்படுகிறது. சூர்யாவின் உழைப்பு ஒவ்வொரு ஃபிரேமிலும் தெரிகிறது. ஒட்டுமொத்த அணிக்கும் எனது வாழ்த்துக்கள்” என்றார்.

0 comments:

Post a Comment

 
Top