துரை செந்தில்குமார் இயக்கிவரும் கொடி படத்தில் நடிகர் தனுஷ் முதல்முறையாக இரட்டை வேடத்திலும் நடிகை த்ரிஷா முதல்முறையாக வில்லியாகவும் நடித்திருக்கிறார்கள். இதில் இருவரும் வெவ்வேறு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளாக நடித்துள்ளார்களாம்.
எனவே படத்திலும் இவர்கள் இருவரும் அனல் பறக்கும் பன்ச் வசனங்கள் மூலம் ஆவேசமாக மோதிக்கொள்வது போல சில காட்சிகள் இடம்பெற்றுள்ளதாம். இதில் இருவரும் போட்டிபோட்டு பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாக பட வட்டாரத்தில் கூறப்படுகிறது. இப்படத்தில் ‘பிரேமம்’ புகழ் அனுபமாவும் ஒரு நாயகியாக நடித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Top