எதிர்நீச்சல், காக்கி சட்டை புகழ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் கொடி படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவுக்கு வந்ததாக நாம் அறிவித்திருந்தோம். ஆனால் உண்மையில் இப்படத்தில் தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டும்தான் இதுவரை முடிந்துள்ளதாம்.
மேலும் இப்படத்தின் இன்னொரு நாயகியான அனுபமா சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் 10 நாட்கள் வரை படமாக்கப்படவுள்ளது. அதன்பிறகே இப்படம் போஸ்ட் புரொடக்ஷனுக்கு செல்கிறது. தனுஷ் ஜோடியாக த்ரிஷா மற்றும் அனுபமா நடித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.
0 comments:
Post a Comment