கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியுள்ளது. இப்படம் ஒரு குறுகிய கால படமாக உருவாகவுள்ளது. அதாவது இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டே மாதத்தில் நடந்து முடிந்துவிடும் என கூறப்படுகிறது.
கௌதம் மேனனின் ஒன்றாக என்டர்டேயின்மென்ட் நிறுவனமும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனமும் சேர்ந்து தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கவுள்ளார். இவர் ‘ஒரு பக்க கதை’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார். மேலும் இப்படத்துக்கு ‘ஒரு வடக்கன் செல்ஃபி’ புகழ் Jomon T John ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Top