கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் தனுஷ் ஜோடியாக ‘ஒரு பக்க கதை’ புகழ் மேகா ஆகாஷ் நடிப்பார் எனவும் கூறப்பட்டு வந்தது.
வழக்கமாக கௌதம் மேனன் இயக்கும் ஆக்ஷன் படங்களில் இரண்டு கதாநாயகிகள் இடம்பெறுவது வழக்கம். அந்தவகையில் இந்த படத்திலும் இரண்டு கதாநாயகிகள் உண்டாம். அதில் ஒருவர் தான் மேகா ஆகாஷ் என்றும் இன்னொரு கதாநாயகி வேடத்தில் வேறொரு முன்னணி நடிகை நடிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.
கௌதம் மேனனின் ஒன்றாக என்டர்டேயின்மென்ட் நிறுவனமும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனமும் சேர்ந்து இப்படத்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment