தனுஷை வைத்து ‘பொல்லாதவன்’ மற்றும் ‘ஆடுகளம்’ என்ற இரண்டு வெற்றி படங்களை இயக்கிய வெற்றிமாறன் சமீபத்தில் இயக்கிய ‘விசாரணை’ திரைப்படம் உலக அளவில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் சென்னை ரஷ்யன் அறிவியல் மற்றும் கலாச்சார மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய வெற்றிமாறன் “விசாரணை’ திரைப்படம் முழுக்க முழுக்க வேறு களம். அதில் நடிக்க தனுஷ் செட் ஆகமாட்டார். மேலும் தனுஷ் தமிழில் பெரிய ஸ்டார். அவரின் ரசிகர்கள், தனுஷ் அந்த வேடத்தில் நடிப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதனால்தான் தினேஷ் அந்த கேரக்டரில் நடித்தார்’ என்று கூறினார்.
விரைவில் தனுஷ் நடிக்கவுள்ள ‘வடசென்னை’ படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment