துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் தனுஷ் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் கொடி. இதன் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. த்ரிஷா வில்லியாக நடிக்கும் இப்படத்தில் பிரேமம் புகழ் அனுபமா ஹீரோயினாக நடித்துள்ளார்.
இவர் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் தனுஷிடம் நடிப்பு சம்பந்தமாக பல ஆலோசனைகளை கேட்டு வாங்கியுள்ளாராம். மேலும் தனுஷின் நடிப்பை கண்டு இவர் அசந்துபோய் விட்டதாகவும் கூறப்படுகிறது. தனுஷ் தயாரித்து நடித்திருக்கும் கொடி படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
0 comments:
Post a Comment