துரை செந்தில்குமார்
இயக்கத்தில் தனுஷ் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் கொடி
படத்தில் முதலில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வில்லனாக நடிப்பதாக
சொல்லப்பட்டு வந்தது. ஆனால் பின்னர் அவர் இப்படத்தில் தனுஷின் தந்தையாக ஒரு
குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தற்போது
இப்படத்தின் வில்லன் யார் என்பது தெரிய வந்துள்ளது. நடிகர் பிரசாந்தின்
தந்தையும் பிரபல நடிகருமான தியாகராஜன் தான் இப்படத்தில் மிரட்டலான வில்லனாக
நடித்துள்ளாராம். நடிகை த்ரிஷாவும் இப்படத்தில் எதிர்மறையான ஒரு
கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜுலையில் திரைக்கு வரவுள்ளது.
0 comments:
Post a Comment