எதிர்நீச்சல், காக்கி சட்டை புகழ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் கொடி படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் 5-ம் தேதி பொள்ளாச்சியில் தொடங்கியது. இந்நிலையில் நேற்றுடன் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்திருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் ஜோடியாக இதில் த்ரிஷா மற்றும் அனுபமா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் நடிகை த்ரிஷா முதல்முறையாக ருத்ரா எனும் கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்திருக்கிறார். அரசியல் திரில்லர் வகையில் உருவாகிவரும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.
0 comments:
Post a Comment