தனுஷ் நடித்து வரும் 'கொடி' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அவர் தயாரித்து வரும் மற்றொரு படமான 'அம்மா கணக்கு' என்ற படத்தின் படப்பிடிப்பும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்தது. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நாளை வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரேவதி மற்றும் அமலாபால் ஆகிய இருவரும் அம்மா-மகளாக நடித்துள்ள இந்த படத்தில் சமுத்திரக்கனி ஒரு முக்கிய வேடத்திலும் தனுஷ் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படம் 'Nil Battey Sannata' என்ற பாலிவுட் படத்தின் ரீமேக் ஆகும்.

பாலிவுட்டில் இந்த படத்தை இயக்கிய அஸ்வினி ஐயர், தமிழ் ரீமேக் படத்தையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் மே மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Top