பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் படம் தொடரி. இப்படத்தில் தனுஷ் பூச்சியப்பன் எனும் கதாபாத்திரத்தில் ரயில் நிலையத்தில் வேலை செய்யும் சமையல்காரராக நடித்துள்ளார். தீவிரவாத கும்பலிடம் மாட்டிக்கொள்ளும் ரயிலை தனுஷ் காப்பாற்றுவது தான் இப்படத்தின் கதையாம்.
இதற்கிடையில் தனுஷ் – கீர்த்தி சுரேஷ் இடையிலான காதலும் பிரதானமாக சொல்லப்படுகிறதாம். இப்படத்தில் கீர்த்தி, சுரேஷ் சரோஜா எனும் கதாபாத்திரத்தில் கேரள பெண்ணாகவே நடித்துள்ளார். இப்படம் வரும் மே 27-ம் தேதியன்று திரைக்கு வரும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Top