கயல் படத்தை தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கியிருக்கும் புதிய படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்துள்ளார். தற்காலிகமாக ரயில் என பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு எப்போதோ முடிந்து விட்டது. ஆனால் இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நீண்ட நாட்களாக நடந்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் இசை பணிகள் தற்போது முடிவுக்கு வரவிருப்பதாகவும் இன்னும் ஒரேயொரு பாடல் மட்டும் கம்போஸ் செய்யப்பட வேண்டும் எனவும் இசையமைப்பாளர் இமான் கூறியுள்ளார். தனுஷ் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் இப்படம் சம்மரில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment