பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் பெயரிடாத படத்தின் படப்பிடிப்பு எப்போதோ முடிந்துவிட்டது. ஆனால் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்களிடம் கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக தற்போது ஒரு செய்தி கிடைத்துள்ளது.
அதாவது இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் படம் மே இறுதியில் வெளியாகிவிடும் என்றும் கூறப்படுகிறது. தனுஷ் ஜோடியாக முதல்முறையாக இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இமான் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.
0 comments:
Post a Comment