பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் தொடரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. இதன் படப்பிடிப்பு வேலைகள் எப்போதோ முடிந்துவிட்டது. எனினும் பல மாதங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் இன்னும் முடிந்த பாடில்லை.
இந்நிலையில் இப்படம் வரும் மே 27-ம் தேதியன்று திரைக்கு வரும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குமுன்பு டி. இமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியாகவுள்ளது. இப்படத்தில் நடிகர் தனுஷ், பூச்சியப்பன் எனும் கதாபாத்திரத்தில் ரயிலில் வேலை செய்யும் சமையல்காரராக நடித்துள்ளார்.
0 comments:
Post a Comment