கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் 14-ம் தேதி சென்னையில் தொடங்கியது. இதில் தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகளை கௌதம் மேனன் படமாக்கினார். இதுதொடர்பான வீடியோ ஒன்றையும் அவர் பதிவேற்றம் செய்தார்.
இந்நிலையில் நேற்றைய படப்பிடிப்பில் ராணா கலந்துகொண்டு நடித்து வந்தார். இவர் இப்படத்தில் ஒரு முக்கியமான ஒரு ரோலில் நடித்து வருகிறார். எனினும் இது கெஸ்ட் ரோல் தான் என சொல்லப்படுகிறது. இப்படத்தில் தனுஷ் ஜோடியாக ‘ஒரு பக்க கதை’ புகழ் மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். கௌதம் மேனனின் ஒன்றாக என்டர்டேயின்மென்ட் நிறுவனமும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனமும் இப்படத்தை கூட்டாகத் தயாரித்து வருகிறது.
0 comments:
Post a Comment