Latest News

கொடி படத்தை முடித்த கையோடு நடிகர் தனுஷ், கௌதம் மேனன் இயக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் நடைபெறவுள்ளது.
இதைத்தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் விரைவில் மும்பை செல்லவுள்ளனர். இப்படத்தின் பெரும்வாரியான படப்பிடிப்பு அங்குதான் நடைபெறும் என சொல்லப்படுகிறது. இதில் தனுஷ் ஜோடியாக ‘ஒரு பக்க கதை’ படத்தின் நாயகி மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். மேலும் ‘பாகுபலி’ புகழ் ராணா இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top