நடிகர் தனுஷ் தற்போது கௌதம் மேனன் இயக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் தனுஷின் ஜோடியாக ‘ஒரு பக்க கதை’ படத்தின் நாயகி மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படம் குறித்து பேசிய மேகா ஆகாஷ், ” எனது பேவரிட் நடிகர் மற்றும் இயக்குனருடன் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. படப்பிடிப்பு தளத்தில் என்னிடம் அவர்கள் இருவரும் மிகவும் இயல்பாக நடந்துகொள்கிறார்கள். நடிப்பு குறித்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள இந்த படம் எனக்கொரு நல்ல அனுபவமாக இருக்கும்” என்றார்.
0 comments:
Post a Comment