தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகங்கள் அதிகரித்துவரும் இந்த சூழலில் நடிகர் தனுஷும் தனது வெற்றிப்படங்களான விஐபி மற்றும் மாரியின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதில் மாரி இரண்டாம் பாகத்திற்கான பேச்சுவார்த்தை ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் அதேபோல் விஐபி இரண்டாம் பாகமும் நிச்சயம் உருவாகவேண்டும் எனவும் ஆனால் அது எப்போது என்பதுதான் தனக்கு தெரியாது என்றும் தனுஷ் கூறியுள்ளார்.
இதற்கிடையில் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன் நடித்துள்ள தங்கமகன் திரைப்படம் வரும் டிசம்பர் 18-ம் தேதியன்று திரைக்குவர தயாராகி வருகிறது. மேலும் அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் வரும் நவம்பர் மாதம் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.
0 comments:
Post a Comment