‘மாரி’ படத்தை தொடர்ந்து இயக்குனர் வேல்ராஜ் இயக்கத்தில் உருவாகி வந்த படத்தை ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகம் என்றனர். ஆனால் இதனை மறுத்து வந்த தனுஷ் சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை வெளியிட்டார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘படிக்காதவன்’, ‘பொல்லாதவன்’, ‘மாப்பிள்ளை’ ஆகிய டைட்டில்களை பயன்படுத்தி கொண்ட தனுஷ் இதற்கும் ரஜினியின் ‘தங்க மகன்’ என்ற டைட்டிலை வைத்தார். பெயர் வைத்தால் மட்டும் போதுமா? விருந்து வைக்க வேண்டாமா? என்று கேட்பவரா நீங்கள்.. அப்படியென்றால் மேற்கொண்டு படிக்கவும்…
எனவே, ‘தங்க மகன்’ படத்தை ரசிகர்களுக்கு ரஜினி பிறந்த நாளில் விருந்து வைக்கவிருக்கிறாராம் தனுஷ். ரஜினி பிறந்தநாளையொட்டி தன் படத்தை வருகிற டிசம்பர் 11ஆம் ரிலீஸ் செய்கிறார். இப்படத்தில் தனுஷுடன் சமந்தா, எமிஜாக்சன், சதீஷ், ராதிகா சரத்குமார், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
0 comments:
Post a Comment