நடிகர் தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நானும் ரௌடிதான் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் மிகுந்த உற்சாகமடைந்துள்ள நடிகர் தனுஷ் நேற்றிரவு டிவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது உங்களுக்கு பிடித்த நடிகர் அஜித்தா? விஜய்யா? என அவரிடம் கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த தனுஷ், நான் இருவரையும் போற்றுகிறேன். இவர்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் பல விஷயங்களை கற்றுக்கொள்கிறேன். ஆனால் அதேசமயம் நான் ரஜினியின் ரசிகன்” என்றார். மேலும் விஜய், அஜித் படங்களை தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்தால் பெருமையுடன் அதை ஏற்றுகொள்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment