‘மாரி’ படத்தை தொடர்ந்து வேல்ராஜ் இயக்கத்தில் ‘தங்க மகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். இதுநாள் இப்படம் ‘விஐபி 2’ என அழைக்கப்பட்டது நாம் அறிந்ததே. இப்படத்தில் தனுஷ் ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகிய இருவரும் நடித்துள்ளனர். தனுஷ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது.
இதனைத் தொடர்ந்து பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் புதிய படத்தில் நடித்து வந்தார். இதில் தனுஷின் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க வில்லனாக ஹரீஷ் உத்தமன் நடித்துள்ளார். இப்படம் ரயிலில் நடக்கும் கதை என்பதால் ரயில்வே ஊழியராக தனுஷ் நடித்துள்ளாராம். இதன் படப்பிடிப்பும் சமீபத்தில் முடிவடைந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
பிரபுசாலமனின் இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவு அதிகபடியான VFX காட்சிகள் இடம்பெறுகிறதாம். இதற்கு குறைந்தபட்ச மூன்றுமாத காலம் தேவைப்படுகிறதாம். எனவே இப்படத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியிடவுள்ளனர். அதாவது காதலர் தினப் பரிசாக இப்படத்தை கொடுக்க இருக்கின்றனர் தனுஷ் – கீர்த்தி ஜோடி.
0 comments:
Post a Comment