ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் அஜித் நடித்து உருவாகியுள்ள படம் ‘வேதாளம்’. சிவா இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதில் அஜித்துடன் ஸ்ருதிஹாசன், லக்ஷ்மி மேனன், சூரி, தம்பி ராமையா, அஸ்வின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இதுவரை இப்படம் தொடர்பாக வெளியான டீசர், பர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர்கள் அனைத்தும் வியாழக்கிழமையே வெளியானது. எனவே இப்படத்தின் பாடல்களும் அதே கிழமைகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாள் வெள்ளிக்கிழமை வருவதால் அக். 16ஆம் தேதி வெளியிடவிருக்கின்றனர். இத்தகவலை அனிருத்தும் தன் ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருந்தார்.
இந்நிலையில் அனிருத்தின் ட்வீட்டுக்கு இவரின் நண்பர்களான தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் பதிலளித்துள்ளனர். இதில் ‘இனியும் காத்திருக்கமுடியாது’ என தனுஷ் தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயனோ ‘பாடல்கள் பெரும் ஹிட்டடிக்க வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Top