வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தங்கமகன் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இவர் பிரபுசாலமன் இயக்கத்தில் ஒரு பெயரிடாத படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் அடுத்ததாக துரை செந்தில்குமார் இயக்கத்தில் இவர் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவுள்ளது.
தனுஷ் இப்படத்தில் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு நவம்பர் 1-ம் தேதியன்று பொள்ளாச்சியில் தொடங்குகிறது. இதன் படப்பிடிப்பை தொடர்ச்சியாக 60 நாட்களில் நடத்திமுடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதன்பின்னர் பிப்ரவரி மாதம் முதல் நடிகர் தனுஷ், வெற்றிமாறன் இயக்கும் வட சென்னை படத்தில் நடிக்கவுள்ளார்.
0 comments:
Post a Comment