துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் சென்னையில் தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் தற்போது பிரபுசாலமன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வரவுள்ளது.
இப்படத்தின் கதை முழுக்க முழுக்க ரயிலில் நடப்பதுபோல் உருவாக்கப்பட்டுள்ளது. தனுஷ் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இப்படத்தில் கருணாகரன், ஹரிஷ் உத்தமன், சின்னி ஜெயந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்கள் நடித்து வருகிறார்கள். டி.இமான் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

0 comments:

Post a Comment

 
Top