தனுஷ், அமலாபால் நடிப்பில் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கியவேலையில்லா பட்டதாரி படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதனை தொடர்ந்து இந்த வெற்றி கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்தது.
விஜபி 2 என்ற பெயரிலேயே ஆரம்பிக்கப்பட்ட இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கு தற்போது தங்க மகன் என்று தலைப்பு வைத்துள்ளனர். அண்மையில் படக்குழுவினர் பஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருந்தனர்.
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்க கே.எஸ்.ரவிக்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கும் அனிருத்தேஇசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment