‘விஐபி’யின் வெற்றிக்குப் பிறகு வேல்ராஜ், தனுஷ் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் தங்கமகன். இப்படத்தில் தனுஷ் ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகை சமந்தா இப்படத்தின் டப்பிங் பணிகளை தான் முடித்துவிட்டதாக தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். நீதானே என் பொன்வசந்தம், 10 என்றதுக்குள்ள படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக நடிகை சமந்தா இப்படத்துக்கு டப்பிங் கொடுத்துள்ளார். மேலும் தற்போது இவர் நடித்துவரும் ‘விஜய் 59′ மற்றும் 24 ஆகிய படங்களுக்கும் இவரே டப்பிங் கொடுக்க முடிவு செய்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Top