பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் பெயரிடாத படத்தின் படப்பிடிப்பு தற்போது 60% முடிவடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை சென்னை, கோவா ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விரைவில் தொடங்குகிறது.
தனுஷ் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இப்படத்தில் கருணாகரன், சின்னி ஜெயந்த், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இமான் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். இதன் ஹிந்தி வெளியீட்டு உரிமையை நடிகர் தனுஷ் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment