‘நேரம்’ புகழ் நிவின் பாலி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி தென்னிந்தியா முழுவதும் பேரதிர்வை ஏற்படுத்திய படம் பிரேமம். இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ரீமேக் செய்ய பலரும் போட்டிபோட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தனுஷ் கைப்பற்றியிருப்பதாகவும் விஜய் சேதுபதி நடிப்பில் இவரே இப்படத்தை தயாரிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது.
தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள நானும் ரௌடிதான் திரைப்படம் தற்போது பாக்ஸ் ஆபீஸில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. இதைதொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை தயாரிக்கபோவதாக நடிகர் தனுஷ் ஏற்கனவே அறிவித்துள்ளார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகவுள்ளது.
0 comments:
Post a Comment