‘மாரி’ படத்தை தொடர்ந்து ‘தங்க மகன்’ படத்தை வெளியிட தயாராகி வருகிறார் தனுஷ். இதில் சமந்தா, எமி ஜாக்சன், ராதிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வேல்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை டிசம்பர் 18ஆம் தேதி வெளியிடவிருக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவிருக்கிறது.
இதனைத் தொடந்து பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படமும் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இவற்றைத் தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ். இதில் முதன்முறையாக தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஒருவருக்கு ஜோடியாக ஷாம்லி நடிக்கிறார். தனுஷின் தந்தையாக நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பை நவம்பர் 1ஆம் தேதியன்று பொள்ளாச்சியில் தொடங்கவிருக்கின்றனர்.
இந்நிலையில் சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் படப்பிடிப்பை நவ. 2ஆம் தேதி தொடங்கவிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Top