இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு பிறகு முதல் படத்திலேயே உலக அளவில் புகழடைந்த தமிழ் இசையமைப்பாளர் என்றால் அது அனிருத் தான். இதற்கு மிக முக்கிய காரணம் யூ டியூபில் தளத்தில் வெளியான இவரது ‘ஒய் திஸ் கொலைவெறி டி’ பாடல். இந்த பாடலை யூ டியூபில் பார்த்தவர்களின் எண்ணிக்கை விரைவில் நூறு மில்லியனை தொடவிருக்கிறது.
இது உலக அளவில் ஒரு மிகப்பெரிய சாதனையாகும். அதேபோல் தனுஷ் – அனிருத் கூட்டணியில் சமீபத்தில் வெளியான மாரி படத்தில் இடம்பெற்றுள்ள டானு டானு பாடல் யூ டியூப் தளத்தில் தற்போது ஒரு கோடி பார்வையாளர்களை தாண்டியுள்ளது. இந்நிலையில் இவர்கள் நான்காவது முறையாக இணைந்திருக்கும் ‘விஐபி 2′ பட பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது.
0 comments:
Post a Comment