‘அனேகன்’, ‘ஷமிதாப்’, ‘மாரி’ படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்தையும் இவ்வருடமே தனது ரசிகர்களுக்கு விருந்தளிக்க இருக்கிறார் தனுஷ்.

வேல்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்திற்கு ‘தங்க மகன்’ என்ற ரஜினி படப்பெயரை தன் படத்திற்கு சூட்டி அறிவித்தார் தனுஷ். மேலும் மூன்று விதமான பட போஸ்டர்களை வெளியிட்டு இருந்தார். இதில் தனுஷுடன், சமந்தா, எமி ஜாக்சன், கே.எஸ்.ரவிக்குமார், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் நடித்து வந்தார் தனஷ். அப்படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் நிறைவடைந்தது என்பது நாம் அறிந்ததே. இதில் தனுஷின் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க வில்லனாக ஹரீஷ் உத்தமன் நடித்துள்ளார். இப்படம் ரயிலில் நடக்கும் கதை என்பதால் ரயில்வே ஊழியராக தனுஷ் நடித்துள்ளார்.
இதில் இவரின் கேரக்டர் பெயர் பூச்சியப்பன் என்பதாகும். எனவே படத்தின் தலைப்பிற்கு இந்த பெயரும் பரிசீலனையில் உள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Top